25.10.12

என் கவிதைகளுக்கு கை ,கால் வரையும் போது ,,,,,

 


என் கவிதைகளுக்கு  வண்ணம் பூசி  பார்த்தேன்,,,,

தலை முடி வரையும்போது 
சிலிப்பிக்கொண்டது,,,

கை ,கால்கள் வரையும்போது
உள்ளே இழுத்துக்கொண்டது....

கண்கள்  வரையும் போது ,,,,
என் தூரிகை பட்டு
அதன் இமை மூடிக்கொண்டது ,,,

கடைசியில்  எதையோ வரையபோய்,,,,

என் தூரிகை  நீண்டு கொண்டது ,,,

என்னவளே ,,,,,,

கடைசியில் ,,,,

வண்ணம் தீர்ந்து போய்

என்  தூரிகை  உன் பெயர் மட்டுமே சொன்னது ,,,,

16.1.12

சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,

அதென்ன ?
நேற்று   
கனவில் வந்ததும் சட்டேன்று 
மறைந்துவிட்டாய் ...... நீ 
பதறி விட்டேன் நான் ,,,,

சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்னும் நிறைய 
இருக்கின்றன ,,,

கனவுகளும்  இரவுகளும் .....

9.7.10

என் தோட்டமும் சில பலூன்களும் ,,,,,........


நான் தோட்டத்தில்  படுத்திருந்தபோது  என்னை
சுற்றி   ஏராளமான  பலூன்கள் ,,,,
சில பலூன்களை  நானே துரத்தி  பிடித்தேன் ,,,
சில பலூங்களின்  வண்ணங்கள் ,,,
அதுவாகவே  வந்து  என் மீது  ஒட்டிக்கொண்டது,,
ஆசை தீர  விளையாடி  மகிழ்தேன் ,,,,
எந்த பலூனும்  வெடிக்கவில்லை ,,
கடைசியில்
நான் மட்டும்  வெடித்தேன்....
நான் வெடித்த பின்னால்,,,,எனக்கு  எந்த
பலூனும்  பிடிக்கவில்லை ,,,
சற்று   நேரதிற்கு    ,,,,
எந்த பலூனுக்கும்  நிறமில்லை ,,,,,
இப்படியாக   வானத்தில்  பறக்கிறது,,,,,
என்  அந்தப்புரக் கனவுகள் ,,,,,,,,,,,,

6.7.10

காட்டுக்குச்சி....

ஊருக்கு ஒதுக்கு புறமாய்
எங்கள் ஊரில் ஒரு மலை இருந்தது ,,
எல்லோரும் போய்வருவார்கள்
புகைத்தவாரே,,,
எல்லோரையும் போல எனக்கும் மலை  ஏற
ஆசைதான் ,,
எத்தனை நாள் தான் தள்ளி போடுவது ..
என்  வயசு  பசங்க  எல்லாம்
மலை மீது  ஏறி வந்த கதை கேட்டு ..
நானும் ஏற முடிவு செய்தேன் ,
,யாரையும் கூட்டு  சேர்க்காமல்
நானே ஏற ஆரம்பித்தேன்
ஏறும் போது சட்டென்று 
காட்டுக்குள்  இருந்து  ஒரு  குச்சி உதவிக்கு
வந்தது ,,,,
நான் மலை பார்த்த மகிழ்ச்சியில்  மிதந்து கொண்டு இருக்க
சட்டென்று  காணாமல் ,,
போனது அந்த  காட்டுக்குச்சி ...
அனேகமாக ,,,
காட்டுக்குச்சி மீண்டும் ...
காட்டுக்கே
போயிருக்ககூடும் ...