9.7.10

என் தோட்டமும் சில பலூன்களும் ,,,,,........


நான் தோட்டத்தில்  படுத்திருந்தபோது  என்னை
சுற்றி   ஏராளமான  பலூன்கள் ,,,,
சில பலூன்களை  நானே துரத்தி  பிடித்தேன் ,,,
சில பலூங்களின்  வண்ணங்கள் ,,,
அதுவாகவே  வந்து  என் மீது  ஒட்டிக்கொண்டது,,
ஆசை தீர  விளையாடி  மகிழ்தேன் ,,,,
எந்த பலூனும்  வெடிக்கவில்லை ,,
கடைசியில்
நான் மட்டும்  வெடித்தேன்....
நான் வெடித்த பின்னால்,,,,எனக்கு  எந்த
பலூனும்  பிடிக்கவில்லை ,,,
சற்று   நேரதிற்கு    ,,,,
எந்த பலூனுக்கும்  நிறமில்லை ,,,,,
இப்படியாக   வானத்தில்  பறக்கிறது,,,,,
என்  அந்தப்புரக் கனவுகள் ,,,,,,,,,,,,

6.7.10

காட்டுக்குச்சி....

ஊருக்கு ஒதுக்கு புறமாய்
எங்கள் ஊரில் ஒரு மலை இருந்தது ,,
எல்லோரும் போய்வருவார்கள்
புகைத்தவாரே,,,
எல்லோரையும் போல எனக்கும் மலை  ஏற
ஆசைதான் ,,
எத்தனை நாள் தான் தள்ளி போடுவது ..
என்  வயசு  பசங்க  எல்லாம்
மலை மீது  ஏறி வந்த கதை கேட்டு ..
நானும் ஏற முடிவு செய்தேன் ,
,யாரையும் கூட்டு  சேர்க்காமல்
நானே ஏற ஆரம்பித்தேன்
ஏறும் போது சட்டென்று 
காட்டுக்குள்  இருந்து  ஒரு  குச்சி உதவிக்கு
வந்தது ,,,,
நான் மலை பார்த்த மகிழ்ச்சியில்  மிதந்து கொண்டு இருக்க
சட்டென்று  காணாமல் ,,
போனது அந்த  காட்டுக்குச்சி ...
அனேகமாக ,,,
காட்டுக்குச்சி மீண்டும் ...
காட்டுக்கே
போயிருக்ககூடும் ...

25.5.10

கோடிட்ட இடம் .............................,,

கோடிட்ட  இடத்தை அறிவதில்  தொடர்கிறது
என்  ஆரம்ப படிப்பு ....
கோடிட்ட இடத்தை  நிரப்புவதில்  தொடர்கிறது
என் பள்ளி படிப்பு .....
கல்லூரி  படிப்பின் போது
கோடிட்ட இடம்
ஆழம்  தெரிகிறது .....
முதுநிலை  படிப்பில்  கோடிட்ட  இடம் 
சுருங்கி  போனாலும் கூட .....
கோடிட்ட இடம் இல்லை என்றால் ,,,
என் படிப்பு  வெற்று காகிதம்தான் ....

விடுதலை ....................

அருகில் என்
துணை இல்லாத
நிமிடங்களில் ,,,
விடிவதற்கு  முன்பே ,,,
சட்டென்று  விடிந்து 
விடுகிறது 
என்  உடலுக்கான  விடுதலை ...

"ச்சி"...

நான்  சிறு  வயதில்  இருந்து
எத்தனையோ  வார்த்தைகளை
கேட்டிருந்தாலும் ....
இப்போதெல்லாம் ...இரவில் ..
நீ சொல்லும்  ஒற்றை
"ச்சி" யை
போல  இல்லை ,,,
மற்றவை ,,,

என் பட்டாம்பூச்சி ,,,,,,,,,,,,

நள்ளிரவு தாண்டி  நடை
பயில அலைகிறது 
என் பட்டாம்பூச்சி ,,,
ஒரு நாள்  அதை நான்
நடை பயில அழைத்து 
செல்லும் போது ,,,
ஒரு பூவின் மீது  அமர்ந்து
வர  மறுத்தது ,,,,
அப்போது  சட்டென்று
மழை  தூவி  என்   பட்டாம்பூட்சியின்
நிறம் பறித்தது ....

உன்னருகில் நானிருந்தால் ...........

உன்னை அறியாமல்   நீ
உறங்கும்போது  ,,,,
உன் அருகில் அமர்ந்து 
உன்  உறக்கம் 
ரசிப்பேன் .....
உன் கால்கள்  அசந்து
அசையும்   நிமிடம் ...
என்
கைகள்  அங்கே  இருக்கும் ...

நாம் ,,,,,,

உலகில் உள்ள  மொழிகள்
எல்லாமே  அழிந்து  போனாலும்
கூட ,,
மீதம் இருக்கும்
இரு வரிகள்  ,,
நம் பெயர்கள்,,,,

எச்சில் இரவுகள் ..,,,,,,,

எப்போதுமே  அழகாகவே ,,,
இருக்கின்றன ,,,
உன்  வீட்டின்  கோல பொடிகளும் ..
யாருக்கும் வழிவிடாத என் வீட்டின்
வாசல் கதவுகளும் ....

எப்போதுமே  அழகாகவே 
இருக்கின்றன ,,,
உன்  வீட்டு  ஜன்னலின்
துவாரங்களும்
அதன் ஊடாக  தெரியும்
உன் கண்களும் ,,,

எப்போதுமே  அழகாகவே
இருக்கின்றன ,,,
என்னை பார்த்துக்கொண்டே ..
பக்கத்துக்கு  வீடு பாப்பாவுக்கு..
நீ  தரும்  முத்தங்களும் ..
அதை
நான் துடைத்து  கொண்ட தருணங்களும் ..

எச்சில் இரவுகள் ..
இன்றும் தொடர்கிறது ,,,
காலையில்  உன் கோல பொடிகளை
காண ,,

சாலைகள் ....

 
முன்பொரு  பொழுதில் 
நீயும்  நானும்  பேசிக்கொண்டே ...
நடந்து  சென்ற  போது,,,
தீர்ந்தே  போனது ,,
சாலைகள் ....