எப்போதுமே அழகாகவே ,,,
இருக்கின்றன ,,,
உன் வீட்டின் கோல பொடிகளும் ..
யாருக்கும் வழிவிடாத என் வீட்டின்
வாசல் கதவுகளும் ....
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
உன் வீட்டு ஜன்னலின்
துவாரங்களும்
அதன் ஊடாக தெரியும்
உன் கண்களும் ,,,
எப்போதுமே அழகாகவே
இருக்கின்றன ,,,
என்னை பார்த்துக்கொண்டே ..
பக்கத்துக்கு வீடு பாப்பாவுக்கு..
நீ தரும் முத்தங்களும் ..
அதை
நான் துடைத்து கொண்ட தருணங்களும் ..
எச்சில் இரவுகள் ..
இன்றும் தொடர்கிறது ,,,
காலையில் உன் கோல பொடிகளை
காண ,,
No comments:
Post a Comment